Thursday, September 5, 2024

காயங்கள் இல்லாமல் ஆக்‌ஷன் ஸ்டாராக மாற முடியுமா?… சமந்தா போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா, கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். நாக சைதன்யாவை திருமணம் செய்து பின்னர் பிரிந்த அவர் சினிமாவிலிருந்து சிறிய இடைவெளி எடுத்திருந்தார். தற்போது மீண்டும் நடிப்பில் ஈடுபட்டு வருகிறார். சமந்தா, சிட்டாடல் வெப் சீரிஸில் நடிப்பதுடன், மற்ற சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி, அதற்கான படப்பிடிப்பிலும் சுறுசுறுப்பாக கலந்துகொண்டு வருகிறார். இப்படியாக இருக்கையில், ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் முட்டியில் அடிபட்டுள்ளார். ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “காயங்கள் இல்லாமல் ஆக்‌ஷன் ஸ்டாராக மாற முடியுமா?” என்று பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “விரைவில் நலம் பெறுங்கள் சமந்தா” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News