தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் இப்போது இந்தியில் சாகித் கபூர் ஜோடியாக ‘தேவா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் வாரிசு நடிகரான ரோஹன் மெஹ்ரா என்பவருடன் கடந்த சில வருடங்களாக காதல் கொண்டுள்ள பூஜா, அவருடன் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை கூட வெளியிட்டதிலை. அதே போல காதல் பற்றிய எந்த தகவலையும் பகிர்ந்து கொண்டதில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் ரோஹன் மெஹ்ராவுடன் பூஜா ஹெக்டே காரில் ஒன்றாக பயணிப்பது போன்ற ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது
நின்று கொண்டிருக்கும் அந்தக் காரில் இருந்து பூஜா ஹெக்டே இறங்கலாமா வேண்டாமா என்று தயங்கி தயங்கி அதே சமயம் வெட்கத்துடன் அமர்ந்திருக்கிறார். அவரது அருகே ரோஹான் மெஹ்ரா மெதுவாக எட்டிப் பார்த்தபடி அமர்ந்துள்ளார். தூரத்திலிருந்து ஜூம் செய்து அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது.
மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் வினோத் மெஹ்ராவின் மகன்தான் இந்த ரோஹன் மெஹ்ரா என்பது குறிப்பிடத்தக்கது