Saturday, July 27, 2024

கள்வன் படத்தில் தன் கதாபாத்திரத்தை உயிரோட்டமாக நடித்த பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் அளித்த தங்க சங்கிலி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது கள்வன் திரைப்படம்.

கள்வன் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, இயக்குனர் பாரதிராஜா மற்றும் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திங்களில் நடித்திருந்தனர்.இதில் ஜிவி பிரகாஷ் கெம்பனாக மாற கடுமையாக உழைத்து இருக்கிறார்.அதே போல தீனா ஹீரோவின் நண்பனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.காதலி கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார் இவானா.

இவர்கள் ஒருபுறம் அசத்த மற்றொரு புறம் தத்தெடுக்கப்பட்ட தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் பாரதிராஜா, அந்த கதாபாத்திரத்துக்கு அவருடைய அனுபவ நடிப்பால் ஆழமாக உயிர் கொடுத்திருக்கிறார்.அவர் பார்வையும் மற்றும் உடல் மொழியும் ரசிக்க வைத்துள்ளன.

இதைக் கொண்டாடும் விதமாக படத்தில் தன்னுடையஅனுபவ நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர், நடிகர் பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தங்கச்சங்கிலி வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வின் போது கதாநாயகன் ஜிவி பிரகாஷ், மேனேஜர் ஸ்ரீதர், இயக்குநர் பி.வி.ஷங்கர், எடிட்டர் லோகேஷ், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் பூர்னேஷ் ஆகியோர் உடனிருந்து கெளரவித்தனர். இயக்குநராகத் தனது படங்களின் மூலம் பல வெற்றிகளைக் குவித்த பாரதிராஜா நடிகராகவும் இப்போது உச்சம் தொட்டுள்ளார். அதற்குக் ‘கள்வன்’ படமே சான்று. அவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம் எனவும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு.‌

- Advertisement -

Read more

Local News