தமிழ் படங்களுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் மலையாள படங்களின் ஹிட்-ஐ தொடங்கி வைத்த பெருமை பிரேமலு படத்திற்கு தான் சேரும்…
பிரேமலு கேரளாவை தாண்டி மற்ற மாநிலங்களிலும் ஹிட் கொடுத்ததால் தமிழிலும் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இப்பட ஹீரோயின் மமிதா பைஜூ துருதுருவென இருக்கும் இவர் சரசரவென மூன்று மாநில இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார்.
சென்னை வந்த கேரளத்து தேவதை பேட்டி அளித்த போது, தமிழ் நாட்டில் பிரேமலு படம் இந்த அளவுக்கு கொண்டாடப்படும் என்று நினைத்தீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இல்லவே இல்லை, நாங்கள் கேரளாவில் ஹிட் கொடுக்கும் என்று நினைத்தோம். தமிழ்நாட்டில இந்த படத்த பத்தி சுத்தமா ஐடியாவே இல்லை. ஆனா தமிழ்நாட்டில் இருக்கிற மலையாள மக்களுக்காக சில ஸ்கிரீன்ல மட்டும் ரிலீஸ் ஆச்சு.ஆனா என்னாச்சு பாருங்க படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம் ஆகியும் தமிழ்நாட்டிலேயும் சரி கேரளாவுலையும் ஹவுஸ் ஃபுல்லா படம் ஓடிட்டு இருக்கு.இதெல்லாம் பாக்குறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
பிரேமலு பட வெற்றில நீங்க என்ன கத்துக்கிட்டிங்க ?
ஏற்கனவே சூப்பர் சரண்யா படத்துல நானும் இந்த படத்தோட ஹீரோ நஸ்லனும் நடிச்சிருக்கோம் இந்த படத்த இயக்குனதும் இதே பிரேமலு டைரக்டர் க்ரிஷ் எ.டி தான்.இந்த படம் ஷூட் பண்ண ஆரம்பிக்கும் போது டெக்னீசியன் என எல்லாரும் ஃபேமிலி மாதிரி ஆயிட்டோம். இந்த படம் ஹிட் ஆகணும்னு குடும்பமா நினைச்சோம் உழைச்சோம் ஹிட் ஆகிடுச்சு…
முன்னாடியே தமிழ் படத்துல நடிக்கிற ஆசை இருந்ததா? சேன்ஸ் கிடச்சதுனால ரிபெல் படத்துல நடிச்சீங்களா?
தமிழ் படத்துல நடிக்கணும் ஆசை முன்னாடியே இருந்துச்சு. எனக்கு தமிழ் மொழியும் தமிழ் படங்களும் ரொம்ப பிடிக்கும். குடும்பமா உக்கார்ந்து மலையாள படங்கள் எந்தளவுக்கு பக்குறோமே அதே அளவுக்கு தமிழ் படங்களையும் பாப்போம்.சூர்யா விஜய் தனுஷ் அஜித் ஹீரோயின்ல அசின் ரொம்ப பிடிக்கும். அப்புறம் நயன்தாரா இவர்கள் எல்லாம் பார்க்கும் போது தமிழ் உலகத்துல நடிக்கணும் ஆசை சின்ன வயசுலயே வந்துடுச்சு. தமிழ் படத்துல நடிக்கணும் நான் ஆசைப்பட்டேன் சான்ஸ் கிடைக்குமான்னு எதிர்பார்த்தேன் அதுக்கேத்த மாதிரி சான்ஸ் கிடைச்சிருச்சு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.
உங்க முதல் தமிழ் படத்தோட எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சு?
எல்லாரும் என்ன கம்ஃபர்டபிளா பாத்துகிட்டாங்க. டைரக்டர் நிதேஷ்க்கு இது முதல் படமாக இருந்தாலும் அவரு ரொம்ப மெச்சூர்டா எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற அளவுக்கு நல்லா நடந்து கொண்டாரு. காலேஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஏகப்பட்ட பேர் இருந்தாங்க எல்லாரையும் பயங்கர குல ஹேண்டில் பண்ணார். இந்த படத்துல நான் இருந்து மலையாள பொண்ணாவே நடிச்சிருக்கறதுனால எனக்கு மொழி பிரச்சனையும் இல்லை தமிழ்ல பேசும்போது மலையாள டச் இருந்தா பிரச்சினை இல்லனு சொன்னதுனால ஷூட்டிங் ஸ்பாட் நல்லாவே போச்சு.
ஜி.வி யோட ஒன்னா நடித்த அனுபவம் எப்படி இருந்துச்சு? கல்யாணம் ஆனவருக்கு கூட ரொமான்ஸ்ஸா நடிச்சது எதும் தயக்கம் இல்லையா?
நான் ஜி.வி.யோட மிகப்பெரிய ரசிகை அவரோட மியூசிக் ரொம்ப பிடிக்கும் குறிப்பா சொல்லனும்னா அவருடைய எமோஷனல் பாடல் பிஜிஎம் இன்னும் முடியுமா சொல்லணும்னா பிறை தேடும் இரவிலே பாட்டு என்னோட ஆல் டைம் ஃபேவரைட் ‘வாவ் என்ன வாய்ஸ்’ எனக்கு எமோஷனலா எப்போதுமே கனெக்ட் ஆகுற பாட்டு. அப்புறம் திரிஷா இல்லனா நயன்தாரா படத்துல கயல் ஆனந்தியை பார்க்கும்போது ஒரு பிஜிஎம் வரும் அந்த பிஜிஎம் திருப்பி திருப்பி கேட்பேன். ஜஸ்ட் நடிப்பு தானே அதுனால தயக்கம் இல்லை. ஜிவி. நல்ல மனுஷன் என்ன கம்ஃபர்டபிளா இருக்க வச்சாரு.அவர் சமூக விஷயங்களுக்காக குரல் கொடுக்கிறது எல்லாம் மிகப்பெரிய விஷயம் என்றார்.