Saturday, July 27, 2024

கமலின் இந்தியன்-2 ரிலீஸ் எப்போது?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1996-ல் ‘இந்தியன்’ படத்தில் கூட்டணி அமைத்த நடிகர் கமலஹாசனும், இயக்குனர் ஷங்கரும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘இந்தியன் 2’ இந்தப் படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்கா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இரண்டாம் பாகத்துக்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் பாகம் எடுக்கும் போதே இந்தியன் மூன்றாம் பாகத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், , ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் ‘இந்தியன்’ இரண்டாம் பாகம் உஐவாகியுள்ளது. இந்தப் படம் மே மாதம் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது

- Advertisement -

Read more

Local News