Wednesday, September 18, 2024

ஒரே ஹோட்டலில் ரஜினி மற்றும் விஜய்! எப்போது சந்திப்பு?‌

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரத்தில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் திருவனந்தபுரத்திற்கு வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்யின் சந்திப்பு வெகுவிரைவில் நிகழ இருப்பதாக கூறப்படுகிறது.

தி கோட் படப்பிடிப்பு சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.திருவனந்தபுரத்தில் நடக்கும் தி கோட் படப்பிடிப்பில் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மாஸ்கோவிற்கு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். விஜய் திருவனந்தபுரம் வந்தது முதல் கேரள ரசிகர்கள் விஜய் செல்லும் இடம்பெறலாம் சூழ்ந்த வண்ணம் உற்சாகத்தில் உள்ளனர்.

வேட்டையன் படப்பிடிப்பும் திருவனந்தபுரத்தில் துவங்கிய நிலையில் திருவனந்தபுரம் சென்றுள்ள ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கியுள்ளனர் என்பதே சுவாரஸ்யம் இப்படி இருக்க இவர்கள் இருவரும் விரைவில் சந்திக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் கேரளா சென்றுள்ள விஜய் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

- Advertisement -

Read more

Local News