சித்தா இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரமின் 62வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வென்ஜரமூடு, துஷாரா விஜயன் என பிரபலங்களும் புதுமுகங்களும் நடிக்கின்றனர். இதன் டைட்டில் டீசருக்காக செங்கல்பட்டு ஏரியாவில் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.

வாழை பழம் காமெடி போல் இந்த படத்தின் டைட்டிலோட பாகம் 2-ஐ பார்த்தால் ஒன்னு இந்தா இருக்கு இன்னொன்னு எங்க இருக்கு என்று தான் கேட்க தோன்கிறது.சற்றே வித்தியாசமாக இந்தப் படத்தை `பாகம் 2′ என டைட்டிலில் கூறியுள்ளார்கள்.இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் பாகம் 1 இதன் முன்கதை என்ன என்பதை பற்றி வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பை துவங்க டைட்டில் டீசரை வெளியிட்டுவிட்டு உடனடியாக பறக்க நினைத்தபோது தேர்தல் இருந்ததால், படப்பிடிப்பைத் தள்ளி வைத்தார்கள். இந்தப் படத்திற்காக மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் லொக்கேஷன் பார்த்து வந்தார் இயக்குநர் அருண்குமார். இப்போது லொக்கேஷன்கள் ஓகே செய்யப்பட்டு விட்டாதால் இம்மாதமே படப்பிடிப்புக்குக் கிளம்பவுள்ளார்கள் என தகவல் தெரிவிக்கின்றன.

இன்னும் சில நாள்களில் படப்பிடிப்பை மதுரையில் தொடங்கிவிடுவார்கள் எனவும் தொடர்ந்து ஒரு மாதம் அங்கே படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தென் மாவட்டங்களை நோக்கி பயணிக்க உள்ளார்கள் படக்குழு.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் முன்னதாகவே இரண்டு பாடல்கள் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.விக்ரமின் ஆல் டைம் ஃபேவரைட் பாடல்களில் ‘தெய்வத் திருமகள்’ படத்தின் பாடல்கள் நிச்சயம் உண்டு.அப்போது இருந்தே அவருக்கும் விக்ரமிக்கும் இடையேயான ஒரு இணக்கம் நல்லவிதமாக இருப்பதால் சீயான் விக்ரமுக்காக சிறப்பான ஸ்பெஷலாக பாடல்கள் கொடுத்துள்ளாதாக கூறப்படுகிறது.