தமிழ் சினிமாவில் ஜொலித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹிந்தி சினிமாவிலும் ஜவான் படத்தின் மூலம் என்ட்ரி ஆனர்.இந்த லேடி சூப்பர் ஸ்டாருக்கே இப்படி ஒரு நிலைமயா என்று ஆச்சரியப்படும் வண்ணம் அவருக்கு படம் வாய்ப்புகள் ஏதும் வராமல் காத்திருக்கிறாராம்.

கடைசியாக நயன்தாரா அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் ஒரு படத்தை எடுக்க ஆசைப்பட்டார் ஆனால் அந்த படத்தை எடுக்க முடியாமல் போனது.தற்போது எல்.ஐ.சி என்ற அந்த படத்தை செவன் ஸ்டார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோரை வைத்து இய்க்கி வருகிறார்.இதற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சராசரியாக நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு 5 கோடி முதல் 8 கோடி வரை சம்பளமாக பெறுவார்.ஆனால் அதிரடியாக அவர் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார்.எல்.ஐ.சி படத்தில் நடிக்க 10 கோடியை சம்பளமாக கேட்ட போது அதை ஏற்கவில்லை என்பதால் அந்த படத்தில் இருந்து நழுவிக் கொண்டார் என செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன.

இவர் தனது சம்பளத்தை திடீரென உயர்த்த காரணம் இந்தியில் முதல் படத்திலேயே என்ட்ரி ஆகி மாஸ் காட்டினார் அதுமட்டுமல்லாமல் அப்படி 1000 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை நொறுக்கியது இதனால் தனது மார்க்கெட் வேல்யூவை அதிகரிக்க தனது சம்பளத்தை நயன்தாரா உயர்த்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
தனது சம்பளத்தை அதிகமாக கேட்டால் மார்க்கெட் சூடு பிடித்து இருக்கிறது என்பார்கள் எனவே பட வாய்ப்புகள் அதிகமில்லாத சமயத்தை பயன்படுத்தி வருமானம் சேர்ப்பது அவசியம் என்ற எண்ணத்தால் தான் தனது சம்பளத்தை டபுளாக அதிகரித்து இருக்கிறார் என தகவல் அடிப்படுகிறது.