Tuesday, September 17, 2024

இன்றைய சினி பைட்ஸ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

என் உடம்புல தெம்பு இல்ல – சமந்தா

அடடே இவங்க தான் அந்த குக்வித் கோமாளி போட்டியாளர்களா?

  • குக்வித் கோமாளி ஷோவுக்குள்ள ரத்னம் படமா?

விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷூட்டிங் கடந்த திங்கட்கிழமை அன்று தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என்றும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஹரி இயக்கி விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

  • என் உடம்புல தெம்பு இல்ல – சமந்தா

நடிகை சமந்தா சிட்டாடல் என்ற வெப் சீரிஸ்ல் நடிக்கிறார்.இந்நிலையில் அவர், என் உடம்புல தெம்பு இல்ல சாப்பிட்டா ஜீரணம் ஆக லேட் ஆகுது, ஆக்ஷன் காட்சி ஒன்னுல நடிக்கும் போது தசைப்பிடிப்பு வந்து ரொம்ப வலியா இருக்கு.ஷூட்டிங் நேரத்தில சும்மா உட்கார முடியாது, இல்ல இப்படி தான் ஒருதடவ நடிக்கும் போதே மயக்கம் போட்டு விழுந்துட்டேன் என்று கூறியுள்ளார்.தசை சம்மந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் தனது தன்னம்பிக்கையால் மீண்டும் நடித்து வருகிறார்.

  • அன்று தொகுப்பாளர் ஆனால் இன்றோ இயக்குனர்!

முன்னணி தொலைகாட்சியான சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான ஆடம்ஸ் பின்னர் சீரியலிலும் நுழைந்தார்.தற்போது ஆடம்ஸ் பெண்களின் பெருமையை முன்னிருத்தும் படத்தை ஒன்று இயக்கி இருக்கிறார்.இப்படம் ரொமான்டிக் த்ரில்லர் திரைப்படம் என்றும் இப்படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • எனக்கு 24 மணி நேரம் போதவில்லை ஏ‌.ஆர்.ரகுமான் ஏக்கம்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம் ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு என் வாழ்கையில் ஓய்வு நேரம் என்ற ஒன்று இருந்தால் தானே சொல்ல முடியும், 37 ஆண்டுகளுக்கு மேலாக எப்போதும் எல்லாமும் தாமதமாக நடக்கிறது இந்த வாழ்க்கைக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று தான் சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

  • அடடே இவங்க தான் அந்த குக்வித் கோமாளி போட்டியாளர்களா?

குக்வித் கோமாளி போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.அதன்படி, பிரியங்கா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, யூடியூபர் இர்ஃபான், வெளிநாட்டு விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி, நடிகர் விடிவி கணேஷ், நடிகை திவ்யா துரைசாமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வசந்த், இளம் நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் குக் வித் கோமாளி 5ல் பங்கேற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News