Tuesday, October 29, 2024

ஆக்ஷனில் அதிரவிட்ட சமந்தா… யப்பா என்ன ஃபைட்…. வெளியான சிட்டாடல் ட்ரெய்லர் – 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வருண் தவான், சமந்தா மற்றும் பலர் நடித்திருக்கும் ‘சிட்டாடல் ஹனி பன்னி’ எனும் வெப் சீரிஸ் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த தொடர் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. தொடரின் முதல் டிரெய்லர் பத்து நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது, அது தொடரின் கதையை ஓரளவிற்கு புரியவைத்தது.

இன்று இரண்டாவது டிரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், அதில் சமந்தாவின் திடீர் ஆக்ஷன் காட்சிகள் மிகுந்த முக்கியத்துவத்துடன் இடம்பெற்றுள்ளன. ஒரு சீக்ரெட் ஏஜென்ட் கணவன்-மனைவியாக இருந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன்பின் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். அந்தப் பெண் குழந்தையை பாதுகாப்பதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே கதைமாந்திரமாக அமைந்துள்ளது.

இந்த தொடரில் கேகே மேனன், சிம்ரன், ஷாகிப் சலீம் மற்றும் பலர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ் மற்றும் டிகே இதற்கு முன்பு சமந்தா நடித்த ‘த பேமிலி மேன்’ வெப் சீரிஸ், ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘பார்ஸி’ வெப் சீரிஸ், மற்றும் துல்கர் சல்மான், ராஜ்குமார் ராவ் நடித்த ‘கன்ஸ் & குலாப்ஸ்’ போன்ற வெற்றிகரமான வெப் சீரிஸ்களையும் இயக்கியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News