Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

திரையுலகை அதிர்ச்சிடைய வைத்த நடிகர் சேசு மரணம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“அச்சச்சோ அவரா? அவர் ரொம்ப பயங்கரமானவராச்சே… நான் யாருன்னு எங்கிட்ட கேக்குறதவிட ” என்கிற வசனம் மூலம் பிரபலமானவர் நடிகர் சேசு. சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் பரதநாட்டியம் நடனம் ஆடி அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தார். தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கு செய்து அவர்களிடம் பாராட்டும் வாழ்த்தும் பெற்ற சேசு, மாரடைப்பு காரணமாக கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் அதிகம் இருந்ததால் நுரையீரல், கிட்னி ஆகியவையும் அவருக்கு பாதிக்கப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளமுடியாத நிலையில் இருந்த சேசு நேற்று காலமானார்.

சேசுவின் இயற்பெயர் லட்சுமி நாராயணன். சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் நடித்து நடிகராக அறிமுகமானவர், தொடர்ந்து ரிமோட், துள்ளுவதோ இளமை உட்பட பல படங்களில் நடித்தார். சந்தனத்துடன் இணைந்து லொள்ளு சபா நிகழ்ச்சியில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர், சந்தானம் நடித்த பல படங்களில் நடித்து சந்தானம் கூட்டணியின் ஆஸ்தான நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

நண்பர்களிடம் உதவிகள் பெற்று கல்வி, மருத்துவம், இலவச திருமணம் என பலருக்கு உதவியாக இருந்தார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சிடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்து வருகினறனர். இவருக்கு மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News