ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் நடிகை மாளவிகா மோகனன் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்திலும், தனுஷுடன் இணைந்து ‘மாறன்’ என்ற படத்திலும் நடித்தார். தமிழில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஸ்டார் நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார்.
பின்னர், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 15-ந் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அதில் கலந்து கொண்ட மாளவிகா சிவப்பு நிற சேலையில் ஜொலித்தார்.
இப்படியாக படங்களில் பிஸியாக இருக்கும் மாளவிகா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சிகப்பு நிற புடவையில் இடை தெரியும் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.