ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படம் கோடியை நெருங்கி வருகிறது. 2018 ஆம் ஆண்டில் வெளியான ஸ்ட்ரீ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிப்பாதி, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை அமர் கௌசிக் இயக்க, ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மட்டோக் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இந்த படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 750 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 நாட்களுக்கு முன்பு வரை ரூ.593 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இந்த படம், ராஜ்குமார் ராவ் படங்களில் அதிக வசூலித்த படமாக உள்ளது. இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த இந்திய படங்களின் வரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.