Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்னா? சூடு பிடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் 8வது சீசனில் கடந்த வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், விஜய் சேதுபதி திடீரென ஒரு மாற்றத்தை அறிவித்தார். எலிமினேஷன் இல்லையென அறிவித்து தீபாவளி பரிசாக 6 வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பினார். அதன்படி, ஷிவகுமார், ராணவ், ரயான், மஞ்சரி, ரியா, வர்ஷினி வெங்கட் ஆகிய ஆறு பேர் புதிய வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இவர்களின் வரவால் பிக்பாஸ் வீட்டில் களம் மேலும் பரபரப்பாக மாறியிருக்கிறது.

அடுத்த கட்டமாக, ஓப்பன் நாமினேஷன் தொடங்கிய போட்டியாளர்கள் தங்கள் மனதில் இருந்த இரண்டு பேரை நேரடியாக முகத்துக்கு நேராக நாமினேட் செய்தனர். இதன் மூலம், அருண் பிரசாத், விஷால், சாச்சனா, தீபக், ரஞ்சித், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, முத்துக்குமரன் என மொத்தம் 11 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் ரஞ்சித் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்றதின் காரணமாக அவர் இந்த வார எவிக்‌ஷனில் இருந்து தப்பித்தார்.

தற்போதைய நிலவரப்படி, எஞ்சியுள்ள 11 நாமினேட் பட்டியலில் முத்துக்குமரன், விஷால், ஜாக்குலின் ஆகியோர் அதிக வாக்குகளுடன் முதலாவது மூன்று இடங்களில் உள்ளனர். அடுத்தபடியாக தீபக், அருண், அன்ஷிதா, பவித்ரா ஆகியோர் தொடர்ந்து வருகின்றனர். கடைசி மூன்று இடங்களில் சாச்சனா, சுனிதா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி இடம் பிடித்துள்ளனர். கடந்த வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்பதால், இந்த வாரம் இரட்டிப்பு எவிக்‌ஷன் நிகழும் வாய்ப்பு காணப்படுகிறது. அப்படி நடந்தால், ஆர்.ஜே.ஆனந்தி உறுதியாக வெளியேறுவார் என கூறப்படுகிறது. எஞ்சியுள்ள சாச்சனா மற்றும் சுனிதா இருவரில் ஒருவர் எலிமினேட் ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News