ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் பணப்பையோடு கெத்தாக சென்ற யாஸ்மின் பொன்னப்பா கோலிவுட்-ல் வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில் அந்தப் படத்தோடு காணாமல் சென்றவர் தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு ரி என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆரண்ய காண்டம். இவருடைய இயக்கத்தில் ஜாக்கி ஷெராப், சம்பத், குரு சோமசுந்தரம் ஆகியோருடன் யாஸ்மின் பொன்னப்பாவும் நடித்திருப்பார். திரைப்படத்தின் இறுதியில் கிளைமாக்ஸ் கட்சியில் கெத்தாக பணப்பையுடன் சென்ற அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை கண்ட பலரும் நிச்சயமாக கோலிவுடில் இவர் வலம் வருவார் என எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் போனார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நான் எங்கேயும் செல்லவில்லை காணாமல் போனவர்கள் பட்டியலில் என்னை சேர்க்காதீர்கள் என்னுடைய சொந்த ஊர் பெங்களூரில் தான் நான் இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த வேலைகளை செய்து செய்து கொண்டிருந்தேன் நான் ஒரு யோகா டீச்சர் என்று பதில் அளித்தார். நான் பெங்களூரில் யோகா சென்டர் நடத்துகிறேன் நான் எப்போதும் அங்கு மிகவும் பிசியாகவே இருந்து விட்டேன் இதிலேயே 13 வருடங்கள் கடந்து விட்டது.

கடைசியாக ஆரண்ய காண்டம் படத்தில் நடித்ததோடு பிறகு ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, நான் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு கதை பிடித்திருக்க வேண்டும். என்னை தேடி எனக்கு பிடித்தது போல் எந்த எந்த கதையும், கதாபாத்திரமும் வரவில்லை அப்படி தேடி வருபவர்கள் எல்லாம் ஆரண்ய காண்டத்தில் நடித்த அதே மாதிரியான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றார்கள் ஆனால் அது ஒரு கிளாசிக் படம் மீண்டும் அதே போல எடுத்தாலும் அதன் அந்த அளவிற்கு அதே உயரத்தை எட்ட இயலாது எனவே நான் மறுத்து விட்டேன்.
கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் ரீ என்ட்ரி கொடுக்க காரணம் என்று கேள்வி எழுப்பிய போது, இடி மின்னல் காதல் என்ற படத்தில் இயக்குனர் பாலாஜி மாதவன் என்னை நடிக்க கேட்டிருந்தார் ஆனால் நான் முதலில் முடியாது என்று மறுத்து விட்டேன் ஆனால் அவர் என்னை நேரில் தேடி வந்து முழு கதையும் கூறினார் பிறகு எனக்கு அந்த கதையின் மீது ஈர்ப்பு இருந்தது எனக்கு பிடித்திருந்தது அதனால் நான் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டேன். புதிய தலைமுறைய இயக்குனர்கள் புதிய குழுவுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் தனியாக தெரியும் என்று நம்புகிறேன் என்றார்.
தமிழ் சினிமாவில் தற்போது உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டபோது, நான் சொல்ல ஆரம்பித்தால் பட்டியல் நீண்டு கொண்டே போகும் குறிப்பாக விஜய் சேதுபதி நன்றாக நடிக்கிறார் அவர் மிகவும் டேலண்ட் ஆனவர் என கூறினார்.
ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு நீங்கள் காணாமல் போனது போல இந்த படத்திற்கு பிறகும் காணாமல் போய்விடுவீர்களா என்ற கேள்விக்கு, அப்படி இல்லை இனிமே சினிமா ஸ்கிரீன்கள் வழியாக நான் கண்டிப்பாக உங்களுக்கு தென்பட்டுக் கொண்டே இருப்பாள் என்றால் யாஸ்மின் பொன்னப்பா. இந்த இடி மின்னல் காதல் படம் செகண்ட் இன்னிங்ஸ் தான் என்று தெரிவித்துள்ளார்.