Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

சகோதரி பவதாரிணியின் உடனான நினைவுகளை வீடியோவாக பகிர்ந்து நெகிழ்ந்த யுவன் சங்கர் ராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்படத்துறையில், “பாரதி” படத்தில் இடம்பெற்ற “மயில் போல பொண்ணு ஒன்று” எனும் பாடலைப் பாடி தேசிய விருதைப் பெற்றவர் பாடகி பவதாரிணி. தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்கள் பாடிய இவர், 1984-ஆம் ஆண்டில் வெளியான மலையாள திரைப்படம் “மை டியர் குட்டிச் சாத்தான்” படத்தில் இடம்பெற்ற “திதிதே தாளம்” பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். இதையடுத்து, “ராசய்யா,” “அலெக்சாண்டர்,” “தேடினேன் வந்தது,” “அழகி,” “தாமிரபரணி,” “உளியின் ஓசை” போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி, உடல்நல குறைவால் காரணமாக 2024 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி உயிரிழந்தார். திரைத்துறையில் இவரது மரணம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DCJseFqhUgV/?igsh=MTB3dW9mMjFqczZxYQ==

இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒரு ரெக்கார்டிங் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட பவதாரிணியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரிணி ஆகியோர் உள்ளனர். “கோட்” படத்தின் “சின்ன சின்ன கண்கள்” பாடல், மறைந்த பாடகி பவதாரிணியின் ஏஐ குரலில் உருவாக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம்.

- Advertisement -

Read more

Local News