Friday, April 12, 2024

கதிர், நரேன் மற்றும் நட்டி நடிக்கும் ‘யூகி’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘Forensic’ மற்றும் ‘Kala’ போன்ற மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களை தயாரித்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும்  AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.

இந்த ‘யூகி’ படத்தில்  கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை  பாத்திரங்களில்  நடிக்கிறார்கள்.

மேலும், பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார். பாக்கியராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதுகிறார். அறிமுக இயக்குநரான ஜாக் ஹாரிஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டது.

இந்தப் படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News