Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“விஜயகாந்த்தின் ஒரே படத்த வச்சு வீடு வாங்கினார்… ஆனா…!”: தயாரிப்பாளர் ஆதங்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்பட விநியோகஸ்தர் டிரைடண்ட் ரவீந்திரன், சில தயாரிப்பாளரும்கூட. அவர்,  டூரிங்  டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, “ என் சித்தப்பா திரைப்பட  விநியோகஸ்தராக இருந்தார் அவரிடம் வேலை பார்த்தேன்.

அப்போது விஜயகாந்த் நடித்த ஒரு படம் வெளியாக இருந்தது. அதை என்.எஸ்.சி. ஏரியாவுக்கு 18 லட்சத்துக்கு வாங்கினார். பிறகு இன்னொருவருக்கு இருபது லட்சத்துக்கு விற்றார்.

நான், “அந்த படத்தை நாமே ரிலீஸ் செய்திருக்கலாமே” என்றேன். அதற்கு அவர், “கைமாற்றிவிட்டதில் கிடைத்த இரண்டு லட்சத்தில் கோபாலபுரத்தில் ஒரு வீடே வாங்கிவிட்டேன்..” என்றார்.

அதற்கு நான், “கைமாற்றாமல் நீங்களே வெளியிட்டு இருந்தால் அந்த வருமானத்தில் கோபாலபுரத்தில் ஒரு தெருவையே வாங்கலாம்” என்றேன்.

நான் சொன்னது நடந்தது.. அதாவது என் சித்தப்பாவிடம் இருந்து இருபது லட்ச ரூபாய்க்கு வாங்கி அந்த படத்தை வெளியிட்ட விநியோகஸ்தருக்கு ஒரு கோடி ரூபாய் லாபம் கிடைத்தது” என்றார் ரவீந்திரன்.

அந்த அளவுக்கு வசூலை அள்ளிக்குவித்த, விஜயகாந்தின் படம் எது..

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…

- Advertisement -

Read more

Local News