Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கும் சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் டீஸர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தேசிய அளவில் 1800 திரையரங்குகளில் நேற்றைக்கு வெளியான சமந்தாவின் யசோதா’ டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் கூட்டணி  இணைந்து இயக்கும் இப்படத்தினை, Sridevi Movies சார்பில் மூத்த தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

இசை – மணி சர்மா, வசனம் – புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்யலட்சுமி, பாடல்கள் – ராமஜோகையா சாஸ்திரி, கிரியேட்டிவ் இயக்குநர் – ஹேமம்பர் ஜாஸ்தி, ஒளிப்பதிவு – M.சுகுமார், கலை இயக்கம் – அசோக், சண்டை பயிற்சி இயக்கம் – வெங்கட், படத் தொகுப்பு – மார்த்தாண்டன், K.வெங்கடேஷ், கள தயாரிப்பு – வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பு – சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, இயக்கம் – ஹரி – ஹரிஷ், தயாரிப்பு – சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், பேனர் – Sridevi Movies.

இந்தப் படத்தின் டீஸர் நேற்றைக்கு இந்தியா முழுமைக்குமாக 1,800-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

இளமை ததும்பும் ஹேண்ட்சம் மருத்துவராக உன்னி முகுந்தன் நடித்துள்ள இந்த டீஸர், மிகச் சிறப்பான கதை மற்றும் அசத்தலான மேக்கிங்குடன் தரமான படைப்பாக  நம்பிக்கை தருகிறது. குழப்பமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் சமந்தா சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், உயிர் பிழைக்க போராடுவதை டீசர் காட்டுகிறது.

பிரமாண்டமான பட்ஜெட்டில் கண்களை கவரும் காட்சிகளுடன், மணி சர்மாவின் இசை காட்சிகளின் தரத்தை உயர்த்த, டெக்னிகலாக ஒரு பிரமிப்பான படைப்பை பார்க்கும் உணர்வை தருகிறது.

தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்த டீஸர் குறித்துப் பேசும்போது, “எங்கள் டீசருக்கு நாடு முழுவதும், அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் 1800+ திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் ‘டீசர்’ இதுதான்.

திரையரங்குகளிலும் சமூக ஊடகங்களிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சமந்தாவின் நடிப்பு மற்றும் பிரமாண்ட உருவாக்கம் பற்றிய பாராட்டுக்களை கேட்பது மிகுந்த மகிழ்ச்சி.

சமந்தா மிகச் சிறப்பான அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் இப்படத்தை சமரசமற்ற ஆக்ஷன் த்ரில்லராக மாற்றியுள்ளார். இந்தக் கதையே மிகவும் தனித்துவமானது. நீங்கள் பார்க்கும் டீசர் படத்தின் ஒரு துளி மட்டுமே. இன்னும் பல ஆச்சர்யங்கள் படத்தில் காத்திருக்கிறது.

“கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கும் அவர், பெண் மருத்துவர் பரிந்துரைத்தும் பார்க்கக் கூடாத ஒன்றை பார்த்து விடுகிறார். அவரை சுற்றி என்னதான் நடக்கிறது? அவர் ஏன் வாழப் போராடுகிறார்? அவர் எதை வெளிப்படுத்த பாடுபடுகிறார்? அதுதான் படத்தின் சுவாரஸ்ய மர்மம்.

எந்த சமரசமுமின்றி சிறந்த தொழில் நுட்ப தரத்தில் 100 நாட்களில் பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ளோம். டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. தற்போது VFX மற்றும் ரீரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருகின்றன.

இப்படத்தினை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்.” என்றார்.

- Advertisement -

Read more

Local News