Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி: கவனம் ஈர்த்த ’அனிமல்’ நாயகன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில், ‘அனிமல்’ திரைப்படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூர் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை கவரவிருக்கிறார்.

பாலிவுட் திரையுலகில் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த நடிகர் ரன்பீர் கபூர்- மும்பையில் நடைபெறும் இந்தியா- நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில் கலந்து கொள்கிறார். இதன் போது அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘அனிமல்’ திரைப்படத்தினை.. கிரிக்கெட் கொண்டாட்டத்துடன் வித்தியாசமாக ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன்சிங், முகமது கைஃப், இர்ஃபான் கான் மற்றும் கிரிக்கெட் போட்டியின் தொகுப்பாளரான ஜதின் சப்ரு போன்ற கிரிக்கெட் நிபுணர்களுடன் ரன்பீர் கபூர் கலந்து கொள்கிறார்.‌ இதன் மூலம் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சியுடன் கிரிக்கெட் நிபுணர்களும் ஒன்றிணைகிறார்கள்.

‘அனிமல்’ திரைப்படத்தில் கதையின் நாயகனான ரன்பீர் கபூரின் கதாபாத்திரத்திற்கும்.விளையாட்டின் ஜென்டில்மேன் போன்ற தோற்றத்தில் உள்ள அதன் ஆக்ரோஷம், உயர்ந்த உணர்ச்சிகள் மற்றும் போட்டி மனப்பான்மை ஆகியவற்றுக்கு இடையே ஒற்றுமைகள் இருப்பதால், இந்த ஒருங்கிணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு சிலிர்ப்பான அனுபவத்தின் வாக்குறுதிகளுடன் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று  நடைபெற்ற  கிரிக்கெட் போட்டி- பாலிவுட் மற்றும் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் அளவு கடந்த காதலை.ஒரு மறக்க முடியாத நிகழ்வாக மாற்றியிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News