நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகை வித்யா பாலன், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் கிங் ஷாருக்கானும் இப்படத்தில் நடிப்பதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரஜினிகாந்த் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியை முன்னிட்டு, படத்திலிருந்து ஒரு சிறப்பு கிளிம்ஸ் வீடியோவை வெளியிட குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

