Thursday, April 11, 2024

பையா 2-ம் பாகத்தில் கார்த்தி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி – தமன்னா ஜோடியாக நடித்து 2010-ல் வெளியானது பையா. படத்தில் இடம்பெற்ற துளி துளியென மழையாய் வந்தாளே, அடடா மழைடா அட மழைடா, உள்ளிட்ட பாடல்கள் ஹிட் ஆகின.

இந்த நிலையில் பையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக லிங்குசாமி சமீபத்தில் அறிவித்தார். இதில் ஆர்யா  – ஜான்வி கபூர் ஜோடியாக நடிக்க இருப்பதாதாக தகவல்கள் பரவின. ஆனால் பையா 2 படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவில்லை என்று அவரது தந்தை போனிகபூர் மறுத்தார்.

இந்த நிலையில் பையா 2-ம் பாகத்திலும் கார்த்தியையே நடிக்க வைக்க அவரிடம் படக்குழுவினர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இதில் கார்த்தி நடிப்பது உறுதியானால், தமன்னாவும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News