Thursday, April 11, 2024

“ஹிந்தி படத்தை வெளியிடுவது ஏன்..?” – உதயநிதி சொன்ன பதில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹாலிவுட்டில் உருவான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தைத் தழுவி தற்போது ஹிந்தி மொழியில்  ‘லால் சிங் சத்தா’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது.

இந்தப் படத்தை தயாரித்து நடித்துள்ளார் நடிகர் அமீர்கான். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை கரீனா கபூர் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். இந்த வேடத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பெற்றிருக்கிறார்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இதையொட்டி இன்று மதியம் சத்யம் திரையரங்கத்தில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் அமீர்கான் உள்ளிட்ட பட குழுவினருடன், உதயநிதியும் கலந்து கொண்டனர்.

அப்போது, “ஹிந்தி தெரியாது போடா என்று எதிர்ப்பைத் தெரிவிக்கும் பனியனையெலலாம் அணிந்து கொண்டு, ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த நீங்கள், தற்போது ஹிந்தி படத்தை வெளியிடுவது ஏன்?” என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டார்கள்.

இதற்கு உதயநிதி பதிலளிக்கும்போது, “எந்த மொழியையும் நாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க கூடாது என்பதைதான் நாங்கள் பல வருடங்களாக கூறி வருகிறோம்.

இது நாங்கள் வெளியிடும் முதல் ஹிந்தி படம். இதற்கு முன்பு தமிழ் தவிர சில தெலுங்கு படங்களை வெளியிட்டு இருக்கிறோம்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News