Wednesday, November 20, 2024

ரஜினியை வைத்து படம் எடுக்காதது  ஏன்? இயக்குனர் லிங்குசாமி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆனந்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. அடுத்து ரன் மாதவன் அந்த கதையில் நடித்தார். மாதவனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். இந்த படத்தில் தான் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி வில்லனாக அறிமுகமானார்.

இந்த படமும் லிங்குசாமிக்கு சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து பையா, ஜீ, சண்டக்கோழி, அஞ்சான் என சில திரைப்படங்களை இயக்கினார். விஷாலை வைத்து சண்டக்கோழி 2 படத்தையும் இயக்கினார். ஆனால், இந்த படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. தெலுங்கு சினிமாவுக்கு சென்று வாரியர் என்கிற படத்தையும் இயக்கினார்.மாதங்களுக்கு  முன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த  லிங்குசாமி ரன் படம் பற்றி பேசினார். அப்படம் பற்றி பல தகவல்களையும் லிங்குசாமி பகிர்ந்து கொண்டார். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவர் நடிப்பில் பாபா படம் உருவானது போது ரன் படமும் ரெடியாகிவிட்டது. பாபா படம் வரும் தேதியில் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. எனவே, ரன் படத்தை ரிலீஸ் செய்ய நினைத்தேன். ஆனால், தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பாபா படம் வெளியாகி 20 நாட்கள் கழித்து தான்  ரன் படம் வெளியானது. பாபா படம் சரியாக ஓடவில்லை. ஆனால் ரன் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக  அமைந்தது. ரஜினி சார் அவர் ரன் படத்தை பார்த்து விட்டு என்னை அழைத்தார்.

அந்த படத்தின் காட்சிகளை கூறி  பாராட்டி  எனக்கு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என கேட்டார். அதை நான் எதிர்பார்க்கவில்லை. எனவே, அவருக்கு என்னிடம் கதையே இல்லை. எந்த காட்சியை யோசித்தாலும் அது நான் எதிர்பார்த்ததை விட கீழே இருந்தது. எனவேதான், அவரை வைத்து நான் படம் இயக்கவில்லை என்றார் லிங்குசாமி.

- Advertisement -

Read more

Local News