Friday, November 22, 2024

விஷாலின் ‘சக்ரா’ படம் பின் வாங்கியது ஏன்..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஷாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சக்ரா’ திரைப்படம் கொரோனா லாக் டவுனுக்கு முன்பாகவே தயாராக இருந்தும் இன்றுவரையிலும் ரிலீஸாக முடியாமல் தவிக்கிறது.

முதலில் ஓடிடியில் இதனை வெளியிடலாம் என்றுதான் விஷால் தீர்மானித்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து தேதிகளும் குறிக்கப்பட்டிருந்தன. இந்த நிலைமையில் அந்தப் படத்தின் கடன் பிரச்சினை காரணமாக பல முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இடையில் லாக் டவுனும் முடிவுக்கு வந்து தியேட்டர்களும் திறக்கப்பட்டு கடைசியாக ‘மாஸ்டர்’ வெளியானவுடன் அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு விஷாலை சற்று யோசிக்க வைத்திருக்கிறது.

இதனால், திடீரென்று ‘மாஸ்டரை’ போலவே ‘சக்ரா’வையும் தியேட்டருக்கு கொண்டு வரலாம் என்று நினைத்து “பிப்ரவரி 12-ம் தேதியன்று சக்ரா வெளியாகும்…” என்று போஸ்டர்களை வெளியிட்டார்கள்.

ஆனால், அதுவும் இரண்டு நாட்களிலேயே முடிந்து போனது. இப்போது மீண்டும் ‘சக்ரா’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறதாம்.

‘ஆக்சன்’ படம் சம்பந்தமாக டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.ரவீந்திரனுக்கு 8 கோடி ரூபாயை விஷால் கொடுக்க வேண்டியிருப்பதால், அதைக் கொடுத்தால்தான் அவரால் ‘சக்ரா’ படத்தை வெளியிட முடியும் என்கிற நிலைமையில் விஷால் இப்போது சிக்கியிருக்கிறார். இதனால்தான் இந்த முறையும் ‘சக்ரா’வை அவரால் கொண்டு வர முடியவில்லையாம்.

- Advertisement -

Read more

Local News