‘சீயான்’ விக்ரம் நடிப்பில் Seven Screen Studio சார்பில் S.லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’.
சயின்ஸ் பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக் குழுவினர் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்தனர். கோலகலமாக ரசிகர்களின் ஆராவராத்துடன் இச்சந்திப்பு இனிதே நடந்தேறியது.
இவ்விழாவினில் நடிகை மீனாட்சி பேசும்போது, “இப்படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தின் புரமோசனை இன்றுதான் துவங்கினோம். மதுரையில் உங்களுடன் அதை துவங்கியது மிகுந்த மகிழ்ச்சி. வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. விக்ரம் சாருக்காக எல்லோரும் படம் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்…” என்றார்.

நடிகை மிருணாளினி பேசும்போது, “மதுரைக்கு வந்தது மிகுந்த சந்தோசம் அளிக்கிறது. நீங்கள் தரும் அன்பு பிரமிக்க வைக்கிறது. இந்தக் ‘கோப்ரா’ படத்தில் எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். இந்தப் படம் நன்றாக வந்துள்ளது..” என்றார்.
நடிகர் விக்ரம் பேசும்போது, “மதுரைக்குள் வந்தாலே மீசை தானாகவே முறுக்குகிறது. உங்கள் அன்புதான் இதற்குக் காரணம். இங்கு நீங்கள் தரும் பிரமிப்பு தருகிறது. அஜய் ஞானமுத்து உங்கள் ஊர்க்காரர். அவர் இயக்கியுள்ள படம். பட வேலைகளால் அவரால் வர முடியவில்லை.
என் தந்தை இந்தக் கல்லூரியில்தான் படித்தார். மதுரையில்தான் நான் ஹாலிடே கொண்டாடுவேன். என் நண்பர்கள் பாலா, அமீர் எல்லாம் இங்குதான் இருந்துள்ளார்கள். அமீர் மதுரையில் இருந்து ஸ்பெஷலாக உணவுகள் கொண்டு வருவார். இன்று மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன்.
இந்தக் ‘கோப்ரா’ படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. எமோஷன், காமெடி, ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். எனக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.
இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.