பிரபல மலையாள நடிகையான ஷகிலா சில்க்கை பற்றி ஒரு அனுபவத்தை ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். ஷகிலா 15 வயதாக இருக்கும் போது முதல் படத்தில் சில்க்கிற்கு தங்கையாக நடித்தாராம்.
ஒரு நாள், ஷகிலாவிற்கு ஒரு ஸ்விம்மிங் ஃபுல் உடை மாதிரியான டிரெஸ்ஸை கொடுத்திருந்தார்களாம். அதை அணிந்து கொண்டிருக்க பாத்ரூம் போவதற்காக இடத்தை தேடி இருக்கிறார். பாத்ரூம் போக வேண்டும் என்றால் முழு ஆடையையும் கழட்டி விட்டு தான் போக வேண்டுமாம். அதனால் ஒரு பாதுகாப்பான இடத்தை நோக்கி தேடி இருக்கிறார் ஷகீலா.
அவர் தங்கியிருந்த அறைக்கு மேல் தான் சில்க் அறை இருந்ததாம். அது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என ஷகிலா சில்க் ரூமுக்கு சென்றாராம். ஆனால் இங்கு எல்லாம் வரக்கூடாது என சில்க்கும் அவருடைய உதவியாளர்களும் அவரை வெளியே துரத்தி விட்டார்களாம். இந்த ஒரு சம்பவத்தால் ஷகிலா “தயவு செய்து சில்க் மாதிரி மட்டும் வரவே கூடாது” என யோசித்தாராம்.
அதிலிருந்து இன்று வரை ஷகிலா அவருடைய உதவியாளர்கள் யாராக இருந்தாலும் தனக்கு சமமாக தான் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.