நடிகர் அஜீத் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான விஷயங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் படமும் கொரோனா சம்பந்தமான பல பிரச்சினைகளை சந்தித்துதான் வருகிறதாம்.
‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா பயத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான 60 வயதுக்கும் மேற்பட்ட பல நடிகர்கள் ஷூட்டிங்கிற்கு வர மறுக்கிறார்களாம்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் அவர்களை மாற்றிவிட்டு படப்பிடிப்புக்கு வரக் கூடியவர்களாகப் பார்த்து தேர்வு செய்து அவர்களை அழைத்து படப்பிடிப்பினை நடத்தி வருகிறார் இயக்குநர் ஹெச்.வினோத். இதனாலேயே சில நாட்கள் படப்பிடிப்பு தாமதமாகிவிட்டதாம்.
படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் இயக்குநர் வினோத்.. “அந்த வெளிநாட்டுக் காட்சியைக்கூட முடிந்தால் எடுப்போம்.. இல்லையெனில் அது சம்பந்தப்பட்ட காட்சியையே படத்தில் இருந்து நீக்கிவிடலாம்…” என்று முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
கூடவே அவர் சொல்லியிருக்கும் இன்னொரு செய்தி, அஜீத்தின் அடுத்தப் படத்தை தான் இயக்கவில்லை. தான் இது குறித்து அஜீத்திடம் இதுவரையிலும் பேசவில்லை. கதையும் சொல்லவில்லை என்று திட்டவட்டமாக மறுக்கிறார். தற்போது தனது முழு கவனமும் ‘வலிமை’ படத்தை முடிப்பதிலேயே இருப்பதாகவும் சொல்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.