எம்.ஜி.ஆருக்கும் தயாரிப்பாளர் சின்னப்பதேவருக்குமான நட்பு திரையுலகம் அறிந்த விசயம். அதற்கு ஓர் உதாரணம் இந்த சம்பவம்.
1967 ஆம் ஆண்டு எம்.ஆர் ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடைப்பட்ட தகராறு காரணமாக எம்.ஆர் ராதா துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். இதனால் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது திரைதுறையில் பலர் ‘எம்.ஜி.ஆருக்கு இனி பேச்சு வருமா.. இனி எம்.ஜி.ஆர் ஆல் நடிக்க முடியுமா.. அவருடைய திரையுலக வாழ்வே முடிந்தது..’என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
அந்த சமயத்தில் சின்னப்ப தேவர் விவசாயி படத்திற்காக அட்வான்ஸ் தொகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க சென்றார்.
‘எம்.ஜி.ஆர் நடிக்க நிச்சயம் இல்லாத இந்த சமயத்தில் அவருக்கு இந்த பணத்தை கொடுக்க வேண்டுமா?’ என்று பலர் சின்னப்ப தேவருக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘நான் தயாரித்த, தாய்க்குப்பின் தாரம் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த பின் தான் என்னால் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட முடிந்தது’ என்று கூறிவிட்டு அட்வான்ஸ் தொகை கொடுத்தார்.
தேவரின் செயலைப் பார்த்த எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார். அவர்களின் நட்பு இன்னும் இறுக்கமானது.