Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

செல்வராகவின் தன்னம்பிக்கை வரிகள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.   ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராவன் நடிக்கிறார்

அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் மனதில் தோன்றும் விஷயங்களை பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது கடவுள் குறித்து பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதே இல்லை. எல்லாம் உங்களின் நம்பிக்கையை பொறுத்தது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம் என முழு மனதாய் நம்புவோம். அதில் என்ன குறைந்து விடப் போகிறோம்? என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News