Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் வெப் தொடர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இணையத்தில் வெளியாகும் ஓ.டி.டி. இணையத்தொடர்களை ரசித்துப் பார்ப்பதற்கு என்றே ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த வாரம் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் ஏராளமான வெப்தொடர்கள் வெளியாக உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்..

மத்தகம்:  ரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள மத்தகம் வெப் சீரிஸ் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் முதல் முறையாக வில்லனாக நடிக்கும் இந்த சீரிஸில் அதர்வா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தாலி: இதில்,  சுஷ்மிதா சென் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் ஸ்ரீகவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டு உள்ளது. இதை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கி உள்ளார். இந்த வெப் தொடர் ஜியோ சினிமாவில் ஆகஸ்ட் 15 ந் தேதியான நாளை வெளியாக உள்ளது.

10 டேஸ் ஆஃப் எ பேட் மேன் :  இந்த வெப் சீரிஸை உலுஸ் இயக்கியுள்ளார். தனியார் புலனாய்வாளர் ஒருவர் ஒரு மாளிகையில் நடக்கும் கொலையின் பின்னணியை அலசி ஆராய்ந்து உண்மையை வெளியில் கொண்டு வருகிறார். இந்த ஆங்கில வெப் தொடரை ஆகஸ்ட் 18ந் தேதி நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.

கன்ஸ் & குலாப்ஸ்: ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே இரட்டையர்கள்  இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர். இதில் ராஜ்குமார் ராவ் , துல்கர் சல்மான் , ஆதர்ஷ் கவுரவ் , கௌதம் ஷர்மா, கௌரவ் சர்மா மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த வெப் தொடர் நெட்பிலிக்ஸில் வரும் 18ந் தேதி வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News