Thursday, November 21, 2024

“தம்பி ராமையா வீட்டை முற்றுகையிடுவோம்” – சீமான் எச்சரிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 219-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி’ படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் விஜே கோபிநாத்தே இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹமத், விஜே முபாசிர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் மட்டும் இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனித்துள்ளார். வரும்

ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக் குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தம்பி ராமையா, சீனு ராமசாமி ஆகியோருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டார். ‘ஜீவி-2’ படத்தின் இசைத் தட்டை சீமான் வெளியிட இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசும்போது, ‘தம்பி ராமையா இங்கு பேசியதுபோல அவர் படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்” என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் பேசும்போது, “ஆஹா ஓடிடி தளத்தை தமிழிலும் கொண்டுவர வேண்டுமென அவர்கள் நினைத்ததற்காகவே அவர்களை பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ்தானே கிடைக்கிறது.

தம்பி சூர்யாவின் ஜெய் பீம்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகவிட்டாலும்கூட ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கில் வெளியான ‘கொண்டபெல்லம்’ என்கிற படத்தை ஓடிடி தளத்தில்தான் பார்த்தேன்.. அவ்வளவு நேர்த்தியான படம் தியேட்டர்களில் வெளியானதா என்றுகூட தெரியாது. ஆனால் ஓடிடி தளத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இருக்கும் வாய்ப்பை தயாரிப்பாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தம்பி சுரேஷ் காமாட்சி சினிமா மீது தீராத பற்று கொண்டவன். பணத்தை சம்பாதித்து வைத்திருக்கிறானோ இல்லையோ நல்ல நண்பர்களை சேர்த்து வைத்திருக்கிறான். அதில்தான் அவனது வண்டி ஓடுகிறது என்று நினைக்கிறேன்.

சிறிய முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்களில் இடம் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் வெள்ளப்பாண்டி, தன் மகன் என அறிமுகப்படுத்தாமல் ஒரு தகுதியான கலைஞனைத்தான் அறிமுகம் செய்திருக்கிறார்.

விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்கு பாராமுகம் காட்டுகின்றன. சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது. நிச்சயமாக ஒரு நாள் தமிழ்த் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும். அந்த நாளும் வரத்தான் போகிறது..” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News