Thursday, April 11, 2024

“புரியாமலேயே நடிச்சோம்!”: பிரின்ஸ் பற்றி சிவகார்த்திகேயன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகி வெற்றி பெற்றது சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த பிரின்ஸ் திரைப்பம். அவருக்கு ஜோடியாக உக்ரேன் பெண்ணான மரியா நடித்தார். அனுதீப் இயக்க, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றினர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் – மரியா ஆகியோரது காதல் காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.
இந்நிலையில் சிவகார்த்திகேயனிடம் இதைக் குறிப்பிட்டு, “மரியாவுக்கு தமிழ் தெரியாது. அவருடன் ஆங்கிலத்தில் பேசி காட்சியை விளக்கி நடித்தீர்களா. இருவருக்கும் நன்றாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதே” என சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு சிவகார்த்திகேயன் சிரித்துக்கொண்டே, “அவங்க உக்ரேன் நாட்டைச் சேர்ந்தவங்க.. உக்ரேனிய மொழிதான் தெரியும். ஆங்கிலம் அவ்வளவா வராது.. அதனால அவங்க பேசற ஆங்கிலம் எனக்கு புரியாது.. நான் பேசற ஆங்கிலம் அவருக்குப் புரியாது..! ஆனாலும் காட்சிகளை புரிஞ்சி நடிச்சாங்க.. அதான் இயல்பா வந்திருக்கு” என்றார்.
மொழிகளைக் கடந்தது உணர்வு என்பதை நிரூபித்துவிட்டார் மரியா!

- Advertisement -

Read more

Local News