Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

நடிகர் விஷாலும் அரசியலுக்கு வருகிறார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஷால், கடந்த சில வருடங்களாக தேவி அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு வருடம் தோறும் உதவி செய்து வருகிறார். அவர் உதவியால் சுமார் 300 பேர், கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் நடத்தியது போல, உதவி பெறும் மாணவிகளையும் அவரது பெற்றோர்களையும் அழைத்து வந்து விழா நடத்த நடிகர் விஷால் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்த விழாவில் விஷாலும் பரபரப்பாகப் பேச இருப்பதாகக் கூறுகின்றனர்.

ஏற்கெனவே விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News