தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த சிவாஜி,ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற நடிகர்களுக்கு இணையான நடிகராக இருந்தவர் ஜெய்சங்கர். மேடை நாடக நடிகராக இருந்து தனது நடிப்பு திறமையால் திரைப்படத் துறைக்கு வந்தார். ரசிகர்களால் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என இவருக்கு பெயரும் உண்டு. கதாநாயகன்,நகைச்சுவை நாயகன் ,வில்லன் என்று தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர்.
நாயகனாக இருந்த இவர் வில்லன் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என நினைத்தார் பஞ்சு அருணாச்சலம். இருப்பினும் அதை ஜெய்சங்கரிடம் நேராக கூறுவதற்கு தயக்கம் அவர் தப்பாக நினைத்து விட்டால். என்ன செய்வது என்று ஏவி.எம்.சரவணனிடம் இந்த என்னத்தை கூறியிருக்கிறார் அருணாச்சலம். இதைக் கேட்ட அவர் ஜெயசங்கரிடமே பேசிவிடலாமே என்றாராம்.
பிறகு ஜெய்சங்கரை அழைத்து இந்த விஷயத்தை கூறியிருக்கின்றனர். அதற்கு மறுப்பு எதுவும் கூறாமல் அடுத்த நிமிடமே, நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார் ஜெய்சங்கர். இதைக் கேட்டு சரவணன் மற்றும் பஞ்சு அருணாச்சலத்துக்கு ஆச்சரியம். ஏன் யோசிக்காமல் சொல்லிவிட்டீர்கள் என்றதுக்கு நீங்கள் கூறினால் சரியாக இருக்கும் அதனால் ஒப்புக்கொண்டேன் என்றாராம்.
ரஜினி நடித்த முரட்டுக்காளை திரைப்படத்தில் தான் ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.