Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

“ஒரு லட்சம் கேட்டு டார்ச்சர் செய்த விக்ரம்!”: கலங்கிய  தயாரிப்பாளர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பாலா, நடிகர் விக்ரம் ஆகியோருக்கு திரை வாழ்க்கையை அளித்த சேது படத்தைத் தயாரித்தவர் கந்தசாமி. இவர் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர், “பாலாவை எனக்கு முன்னதாகவே தெரியும். அவருக்காகத்தான் படம் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். இன்றுவரை இருவரது உறவும் தொடர்கிறது” என்றார்.

மேலும், “சேது படம் விற்பனை ஆகாத நிலையில் மிகவும் சிரமப்பட்டேன். ஒருவழியாக ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. ஆனால் எனக்கு எந்த லாபமும் இல்லை. கடன்தான்.

இந்த நிலையில் சேது படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சசி, பட போஸ்டருக்காக விக்ரமிடம் ரூ ஒரு லட்சம் வாங்கினார். அதை சிறப்பாக போஸ்டர் அடித்து பல இடங்களில் ஒட்டச் செய்தார்.

ஆனால் விக்ரமிடம் அவர் பணம் வாங்கியது தெரியாது. சில நாட்களில் தனது அம்மாவுடன் என் அலுவலகம் வந்த விக்ரம், ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுங்கள் என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் விசயம் தெரிந்தது.

நான், மிகுந்த கடனில் இருக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடித்து இந்த படம் மறுவாழ்வு அளித்து இருக்கிறது. ஆகவே ஒரு லட்ச ரூபாய் செலவழித்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றேன்.

ஆனால் அந்த பணத்தை வாங்குவதில் விக்ரம் பிடிவாதமாக இருந்தார்.. டார்ச்சர் செய்தார்” என்றார் கந்தசாமி.

அதன் பிறகு என்ன நடந்தது… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News