Thursday, November 21, 2024

“ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் நடிக்க வேண்டும் என்று தோன்றியது” – ‘டாணாக்காரன்’ படம் பற்றி விக்ரம் பிரபு பேச்சு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 8-ம் தேதியன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் மற்றும் லால் ஆகியோர் முதன்மை வேடங்களில்  நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஃபிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

காவல் துறை சார்ந்த எண்ணற்ற திரைப்படங்களை தமிழ் சினிமா பார்த்திருந்தாலும், இந்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு இதுவரையிலும் அறிமுகமில்லாத ஒரு புதிய பார்வையை, ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் விக்ரம் பிரபு பேசும்போது, “டாணாக்காரன்’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், அழுத்தமாகவும் இருந்தது. இந்த ஸ்கிரிப்டை கேட்ட பிறகு, இதில் நடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்தேன், ஒரு நடிகராக எனது திறமையை வெளிப்படுத்தும் படைப்பாக இருக்கும்.

தமிழ் திரையுலகில் படைப்பாற்றல் மற்றும் திறமையாளர்களை கண்டெடுத்து, வளர்க்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவது, ஒரு அற்புதமான அனுபவம். தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லையென்றால், இந்த ‘டாணாக்காரன்’ இவ்வளவு திருப்திகரமான வெளியீட்டைக் கண்டிருக்க முடியாது.

இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை தன் உயிராக வடிவமைத்து,  மிக அற்புதமான படைப்பாகச் செதுக்கியுள்ளார். டாணாக்காரன்’ மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News