விஜயகாந்துடனான தனது நெகிழ்ச்சியான் அனுபவத்தை கூறியிருக்கிறார் நடிகர் சம்பத்.
“2004 ஆம் ஆண்டு விஜயகாந்த், மஹிமா, நாசர் ஆகியோரின் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த “நெறஞ்ச மனசு” படம்தான் எனக்கு முதல் படம். இதில் சிவணான்டி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தேன். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனால் வருத்த்தில் இருந்தேன்.
அப்போது எதிர்பாராமல் விஜயகாந்திடம் இருந்து மீண்டும் அழைப்பு. அப்போது அவரது “பேரரசு” திரைப்படம் உருவாக இருந்தது. அவர் என்னிடம்,’உன் முதல் படமே பெரிய அளவில் போகலையே என்ற வருத்தம் இருக்கும். கவலைப்படாதே.. இந்தப் படத்தில் நடி. நிச்சயம் படம் ஜெயிக்கும். உனக்கும் அங்கீகாரம் கிடைக்கும்’ என கூப்பிட்டு வாய்ப்பு அளித்தார்.
அவரது பெரிய மனதை நினைத்து அங்கேயே அழுதுவிட்டேன்” என்று கண்கலங்க கூறினார் சம்பத்.