Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

தந்தையின் 100வது பிறந்தநாளில் கைக்கூப்பி உருகி வணங்கிய விஜயகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தற்போது தே.மு.தி.க. தலைவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றன.

மேலும்,  வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த நடிகர். கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார்.

உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில் விஜயகாந்தின் தந்தை அழகர்சாமியின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு இருந்தது. அதில் விஜயகாந்தின் மொத்த குடும்பமும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படத்தை தற்போது விஜய் பிரபாகரன் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் விஜயகாந்த், பிரேமலதா, விஜயகாந்த் மகன்கள் ஆகியோர் அழகர்சாமியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.

இந்த படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News