நடிகர் விஜய் சினிமாவில் தனது தந்தை இயக்கிய படங்களில் மட்டுமே முதலில் நடித்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பார். ஆனாலும் ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு அறிமுகம் இல்லாத நடிகராகவே இருந்தார்.
விக்ரம் இயக்கிய ’பூவே உனக்காக’ திரைப்படம் தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து ’தளபதி’ என்ற பட்டத்துடன் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய் சினிமாவுக்கு வந்த புதிதில் கல்லூரி மாணவிகள் சேர்ந்து பேட்டி ஒன்று எடுத்தார்கள். அப்போது மாணவி ஒருத்தார் விஜயிடம் நீங்கள் குறும்பு செய்து மாட்டி இருக்கீங்களா என்றார்.
கல்லூரி படிக்கும் போது ரயிலில் நண்பர்களுடன் சுற்றுலா சென்று கொண்டிருக்கும் போது. தோழியர்களிடம் ஆண் பயணிகள் இருவர் கேலி செய்து வம்பு இழுத்தனர்.
நான் எனது நண்பர்கள் 10 பேர் சேர்ந்து அவர்களை அடித்து விட்டோம். அடுத்த ரயில் நிலையம் வரும் போது அடி வாங்கிய நபர்களின் நண்பர்கள் 40 பேர் எங்களை அடித்து துவம்சம் செய்து விட்டார்கள் என்றார் விஜய்.