Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கேமியோ ரோலில் விஜய் சேதுபதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, மௌனப் படமான ‘காந்தி டாக்கீஸ்’, தமிழில் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை பாகம் 2’, மிஷ்கின் இயக்கும் டிரெயின், மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுக குமார் இயக்கும் புதிய படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவ்வப்போது சிறப்புத் தோற்றத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவாவதாகச் சொல்லப்படும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

விஜய் சேதுபதி, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ஏற்கனவே சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

Read more

Local News