தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக விளங்குகிறார் பூரி ஜெகன்னாத். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் நடிகை சார்மியும் பங்குதாரராக செயல்பட்டு வருகிறார். அவர்களது தயாரிப்பில் வெளியான “லைகர்” மற்றும் “டபுள் ஐஸ்மார்ட்” ஆகிய திரைப்படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தன. கடந்த காலங்களில் பூரி ஜெகன்னாத் இயக்கிய ஏழு திரைப்படங்களில் சார்மி இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

தொடர் தோல்விகளால் முக்கிய நடிகர்களை அணுகி, தனது அடுத்த படத்தில் நடிக்க வேண்டுமென்று பூரி கேட்டுள்ளார். ஆனால், சார்மி இணை தயாரிப்பாளராக இருக்கக் கூடாது என சில நடிகர்கள் கூறியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, தமிழ் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து, அவருக்கு ஒரு கதை சொல்லியுள்ளார். அந்தக் கதையை விரும்பிய விஜய் சேதுபதி, இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படம் பான் இந்தியா படமாக உருவாகி, ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.சமீபத்தில் வெளியான பத்திரிகை அறிக்கையில், சார்மி இணை தயாரிப்பாளராக இருப்பதுடன், விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி ஆகியோர் ஒரே புகைப்படத்தில் இருப்பதும், பூரி – சார்மி இணைப்பு தொடர்ந்து நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது.