Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் விமர்சனங்களில், “இது விஜய் படமே இல்லை.. விஜய் சேதுபதியின் திரைப்படம்…” என்று பலரும் எழுதியிருந்தார்கள்.

ஆனால் விஜய் சேதுபதியோ “மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு முழு காரணம் விஜய்தான்” என்று கூறியுள்ளார்.

இன்றைக்கு சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் சேதுபதி வந்திருந்தபோது பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, “சமீபத்தில் வெளியான மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த விஜய் சார் அவர்களுக்கும் அந்தப் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும், ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கும் மிகவும் நன்றி.

திரும்பவும் மக்கள் தியேட்டருக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அதற்கான நன்றியை நான் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் திரைப்படத் துறையில் பல பேருக்கு வாழ்க்கையை தொடங்கி வைத்துள்ளது, நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

இந்த மாஸ்டர்’ படம் முழுக்க, முழுக்க இந்த அளவுக்கு வெற்றி பெற்றதற்கு விஜய் ஸார்தான் காரணம்…” என்றார் விஜய் சேதுபதி.

“மாஸ்டர்’ படம் விஜய் சேதுபதியின் படம் என்று உங்களுடைய ரசிகர்கள் கூறி வருவது குறித்து உங்களது கருத்து என்ன..?” என நிருபர் ஒருவர் கேட்டபோது, “நான்தான் ஏற்கனவே இந்த படம் விஜய் சார் அவர்களால்தான் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லிவிட்டேனே.. அதன் பிறகு இந்தக் கேள்வி அவசியமில்லாதது…” என்றார் விஜய் சேதுபதி.

- Advertisement -

Read more

Local News