Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“விஜய் சாதாரண ஆள் இல்லை!”: ரஜினி பேச்சுக்கு மிஷ்கின் விளக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினியின் பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. கழுகு – காகம் குறித்து ரஜினி கூறிய குட்டிக் கதையும் வைரலானது. இதில் நடிகர் விஜய்யை மனதில் வைத்துதான் ரஜினி அப்படி பேசியதாக பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கினிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இது குறித்து மிஷ்கின் கூறும்போது, “ரஜினியின் பேச்சை நான் கேட்கவில்லை. ஆனால் அவ்வளவு பெரிய மனிதர் கண்டிப்பாக அப்படி சொல்லியிருக்க மாட்டார். அதனைக் கேட்காமலேயே என்னால் உறுதியாக சொல்லமுடியும். அதேபோல விஜய்யும் சாதாரண ஆள் கிடையாது. அவரும் பெரிய ஆள்தான். விஜய்யை ரஜினிக்கே மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் இதனை வைத்து சண்டை  போட்டுக் கொள்ளக் கூடாது. இது ஒரு குடும்பம். ரஜினி அதில் மூத்தவர், விஜய் இளையவர். அப்படித்தான் பார்க்க வேண்டும். வெளியில் இருப்பவர் இதனை வைத்து அடித்துக் கொள்ளக் கூடாது” என்று மிஷ்கின் கூறினார்.

தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் ரஜினியின்

- Advertisement -

Read more

Local News