Thursday, November 21, 2024

விஜய் ரசிகர்களின் ஆர்வக் கோளாறு – பிரதமர்-தோனி, முதல்வர் – விஜய்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நேற்றுதான் அந்தச் சந்திப்பு நடைபெற்றது. அதற்குள்ளாக அதற்கு அகில இந்திய அளவில் டிரெண்ட்டாகும் லெவலுக்கு போஸ்டர்களை அடித்துவிட்டார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நேற்று நடிகர் விஜய்யை சென்னையில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு விஜய் தற்போது நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்றது. விஜய் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தின் அருகிலேயே தோனி நடிக்கும் ஒரு புதிய விளம்பரப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தோனி, அருகிலேயே விஜய் இருக்கிறார் என்றதும் அவரைச் சந்திக்க விருப்பப்பட்டதால் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இது விஜய்யின் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.

இதனால் அவர்கள் டிவீட்டரில் நேற்று மதியத்தில் இருந்தே ‘தல’ தோனி-‘தளபதி’ விஜய் மீட்டிங் என்று குறிப்பிட்டு செய்தியைப் பகிர்ந்து கொண்டார்கள். இது வழக்கம்போல அஜீத்தின் ரசிகர்களுக்கு கோபத்தைக் கிளப்பியது. ‘தல’ தோனி என்று விஜய் ரசிகர்கள் அழுத்தமாகச் சொன்னதே இதற்காகத்தானே..!

பின்பு அஜீத் ரசிகர்களும் கோதாவில் இறங்கி, “இந்தியாவிலேயே ‘தல’ என்றால் அது எங்களது அஜீத் மட்டும்தான். வேறு யாரும் ‘தல’ இல்லை” என்றை சொல்லி இதற்கு அடையாளமாக #ஓரேதல என்ற ஹேஸ்டேக்கை நேற்று டிவீட்டரில் வைலராக்கினார்கள்.

இந்த நிலையில் மதுரையில் இருக்கும் விஜய்யின் ரசிகர்கள் கொஞ்சம் ஓவராகவே போய்விட்டார்கள். தோனி-விஜய் சந்திப்பின் புகைப்படத்தின் பின்னணியில் தோனியை ‘பிரதமர்’ என்றும் விஜய்யை ‘முதல்வர்’ என்றும் குறிப்பிட்டு ‘ஆளப் போகும் மன்னர்கள்’ என்ற டைட்டிலில் போஸ்டர் ஒட்டிவிட்டார்கள்.தற்போது மதுரை முழுவதும் இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறதாம்.

ஏற்கெனவே தமிழக அரசுக்கும், விஜய்க்கும் நிலைமை சுமூகமாக இல்லை. இந்த நேரத்தில் இந்த போஸ்டரால் என்ன பிரச்சினை வெடிக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன ஊடகங்கள்.

- Advertisement -

Read more

Local News