Friday, April 12, 2024

‘லைகர்’ படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தேவரகொண்டாவின் புதிய திரைப்படமான LIGER’(Saala Crossbreed) படத்திலிருந்து  ஒரு அசத்தலான, மிரட்டலான போஸ்டர் நேற்றைக்கு வெளியாகியுள்ளது..!

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions ஆகிய நிறுவனங்கள் இனைந்து இந்த லைகர்’ படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர், இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

படத்தின் நாயகனாக விஜய் தேவரகொண்டாவும், இவருக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டேவும் நடிக்கின்றனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ்ரீனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். கலை இயக்கம் – ஜானி சையிக் பாட்ஷா, பட தொகுப்பு- ஜுனைத் சித்திக், எழுத்து, இயக்கம் – பூரி ஜெகன்நாத்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் சினிமா அனுபவத்தை அளிக்கும்விதமாக, ரத்தம், வியர்வை, இதயம் மற்றும் ஆன்மாவை உருக்கி,  இந்த மாஸ் ஆக்‌ஷன் எண்டெர்டெயினர் உருவாக்கப்பட்டுள்ளது.

துணிச்சலான கதை சொல்லலுக்காக இந்தப் படம் நீண்ட காலமாக ரசிகர்கள் நினைவில் இருக்கும். படத்தில் MMA ஃபைட்டராக நடிக்க நடிகர் விஜய் தேவரகொண்டா உண்மையில் தன்னுடைய மிகப் பெரிய உழைப்பை தந்துள்ளார்.

உலகம் போற்றும் லெஜண்ட்டான மைக் டைசன் இத்திரைப்படத்தில் ஒரு வலிமையான பாத்திரத்தில் நடித்துள்ளார். சர்வதேச அடையாளமாக விளங்கும் மைக்  டைசனின் பிறந்த நாள் சிறப்பு வீடியோவில், அவரது பணிவான குணமும் மற்றும் அவர் படக் குழுவுடன்  நெருக்கமாக இருந்தவிதமும் பலரின் இதயங்களை வென்றது.

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த லைகர்’ படம் கருதப்படுகிறது. மேலும், படத்தின் ஒவ்வொரு அறிவிப்பிலும் படக் குழுவினரின் எதிர்பார்ப்புகள் மேலும், மேலும் அதிகமாக்கி கொண்டே போகிறது.

நேற்றைக்கு வெளியான விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரத்தைக் குறிக்கும் சாலா கிராஸ்பிரீட் Saala Cross breed போஸ்டர் மிரட்டலாகவும் அசத்தலான தாக்கத்தையும் தருகிறது .

விஜய் தேவரகொண்டாவின் அனைத்து திறமைகளைும் ஒட்டு மொத்தமாக வெளிக்காட்டும்படி, தயாரிப்பாளர்கள் இந்தப் போஸ்டரை வெளியிட்டுள்ளனர், போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கிட்டத்தட்ட நிர்வாணமான தனது உடலமைப்பைக் காட்டியுள்ளார். இப்படி போஸ் கொடுக்க ஒருவருக்கு தைரியம் வேண்டும்தான்.

விஜய் தேவரகொண்டா மிகவும் துணிச்சலானவர். தான் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், தனது படங்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பதை இந்தச் செயலின் மூலம் அவர் காட்டியுள்ளார்.

இந்தப் படக் குழு சமீபத்தில் மும்பையில் ஒரு பாடலை பதிவு செய்தது. படக் குழுவினர் படத்திற்கான விளம்பரங்களைத் விரைவில் தொடங்கவுள்ளனர். அடுத்தடுத்து தொடர் அப்டேட்களுடன் வர தயாராக இருக்கின்றனர்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் பன் மொழி இந்திய திரைப்படமான இந்த லைகர்’ படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News