Friday, April 12, 2024

விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருப்பது ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு அடுத்து அதிகப் படங்களில் நடித்து வருபவர் விஜய் ஆண்டனிதான்.

அரை டஜன் படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனியின் அடுத்தப் படம் எதுவாக இருக்கும் என்கிற குழப்பம் திரையுலகத்தில் நிலவி வந்தது.

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘தமிழரசன்’ என்ற படத்தை பெப்சி சிவா தயாரித்துள்ளார். மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. படம் முடிவடைந்து வெளியீட்டுத் தயாராக இருந்தாலும் தயாரிப்பாளர் உடனேயே வெளியிடத் தயங்குவதால் இந்தப் படம் அப்படியே இருக்கிறது.

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டி.சிவா தயாரிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருப்பதால் இந்தப் படம் இன்னமும் முடிவடையவில்லை.

‘காக்கி’ என்ற படத்திலும் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் பாக்கியிருக்கிறதாம். கொரோனாவுக்காக காத்திருந்தவர்கள் தற்போதுதான் கிளம்புவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருப்பதால் இதுவும் தாமதமாகவும் என்கிறார்கள்.

இதற்கிடையில் ‘கோடியில் ஒருவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தை மட்டும் மீண்டும் மின்னல் வேகத்தில் தட்டியெழுப்பிய விஜய் ஆண்டனி இந்தப் படத்தை முழுமையாக நடித்து முடித்துவிட்டு டீஸரையும் வெளியிட்டுவிட்டார்.

தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனால், விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்தத் திரைப்படம் ‘கோடியில் ஒருவனா’கத்தான் இருக்கும்..!!!

- Advertisement -

Read more

Local News