Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ஆர்வத்தை அதிகரிக்கும் கேள்விக்குறி!: ‘மூன்றாம் கண்’ பர்ஸ்ட் லுக்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கே. சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் உருவாக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிக்கும் படம் ‘மூன்றாம் கண்’.

இப்படத்திற்கு அஜீஸ் பாடல்களுக்கு இசையமைக்க ராஜ் பிரதாப் பின்னணி இசை அமைக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை ஆர்யா, கௌதம் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கதையின் கதாபாத்திரங்கள் மேல் நோக்கி ஆர்வத்துடன் பார்க்க, அவர்கள் ஒரு கேள்விக்குறி போன்று காட்சியளிக்கிறார்கள்.  இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

படம் குறித்து இயக்குநர், “ஒரு  அதிரடியான சம்பவம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக பல நிகழ்வுகள் தொடர்கின்றன. இப்டி ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக படம் அமைந்துள்ளது” என்றார்.

 

- Advertisement -

Read more

Local News