Wednesday, November 20, 2024

“வீரப்பன் இப்போது தேவை!”:  முத்துலட்சுமி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேஎன்ஆர் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாவீரன் பிள்ளை. சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி  நாயகியாக அறிமுகமாகிறார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குநர் கேஎன்ஆர் ராஜா, இயக்குநர் பேரரசு, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீரப்பன் மகள் விஜயலட்சுமி பேசும்போது, “சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படும்  சம்பவங்கள் தொடர்ந்து  கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்து படம் இது.  ஆகவேதான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றார்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, ‘ எனது கணவர் வீரப்பன் தமிழ் தேசியவாதியாக கர்நாடகத்தில் தமிழர்கள் துன்புறுத்தப்பட்ட போது அதனை எதிர்த்துப் போராடியவர். அவர் எப்போதும் சாதிக்கு துணை போகாதவர். வீரப்பன் போல் ஒருவர் தேவை என்பதே தமிழக மக்கள் இப்போது உணர்கின்றனர்.

ஆனால் அன்று வீரப்பன் தேசத்துரோகி என்று அவரை விஷம் வைத்து இந்த அரசு கொலை செய்தது. அவரை சுட்டுக்கொன்றதாக காவல்துறை பொய் சொல்லி வருகிறது’ என்றார்.

 

- Advertisement -

Read more

Local News