ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படங்கள் வெளியாகின்றன. இரு படங்களிலும் சுருதிஹாசன் நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி டிரைலர் வெளியாகி 17 மணி நேரத்தில் 52 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந் நிலையில், டிரைலரில் ஹீரோயின் நெஞ்சில் சிகரெட்டை போட்டு தனது வாயில் பிடிக்கும் காட்சி ஒன்று இருப்பது, சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
“சிகரெட் பிடிப்பதே தவறு. அதுவும் ஒரு நடிகையின் மார்பில் சிகரெட்டை போட்டு பிடிப்பதே ஏற்கவே முடியாது.. அந்தக் காட்சியை நீக்க வேண்டும்” என தெலுங்கு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.